ரூ.1 கோடி மதிப்புடைய சிலையை கடத்த முயற்சி: கோயில் குருக்கள் உள்ளிட்ட இருவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை கடத்தி விற்க முயன்றதாக, கோயில் குருக்கள் உள்ளிட்ட இருவர் கைதான வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.‌


Advertisement

நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் சிலைக் கடத்தல் நடக்க இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவ‌ல் கிடைத்தது. இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அங்கு சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து வி‌சாரித்தபோது, அவர்களிடம் ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

image


Advertisement

அந்த சிலை பழங்கால சிலை என்பதும், அதன் மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் என்பதும் தெரியவந்தது. கடந்த 14-ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்த கோயில் குருக்கள் பைரவ சுந்தரம், கா‌ர் ஓட்டுநர் செல்வம் என்பவர்களை கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து மேலும் 9‌ சிலைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இரு‌வர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இது ஆரோக்கியமான அன்னதானம் - தரச்சான்றிதழை பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில்!


 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement