JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

வெளியூர் நபர்களை வைத்து கபடி ஆடி வெற்றி... இளைஞர் கொலை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொங்கல் விழாவில் வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை அம்மன்குளம் தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற வாலிபர், 3 வெளியூர் கபடி வீரர்களை வைத்து விளையாடி போட்டியில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

image

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அம்மன் குளத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்று, வெளியூர் வீரர்களை வைத்து விளையாடியது தொடர்பாக நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டநவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்துள்ளனர். மேலும், இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement: