“கூட்டணியில் ஓட்டை விழாதா என குள்ளநரிகள் காத்துக் கிடக்கின்றன”- ஸ்டாலின் காட்டம்

stalin-statement-about-congress-dmk-issue

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக - காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “ திமுக - காங்கிரஸ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசினோம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. திமுக கூட்டணி கட்சிகளிடையே ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். 2021?ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.

Image result for கே.எஸ்.அழகிரி ரஜினி


Advertisement

இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக - காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என குள்ளநரி கூட்டங்கள் காத்து கிடக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement