“ரஜினி இலங்கை வர எந்தத் தடையும் இல்லை” - நமல் ராஜபக்ச

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்த் இலங்கை வர எந்தத் தடையும் இல்லை என மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை. அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம். ஒரு தடையுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும் எனவும் அங்கு உள்ள தமிழ் மக்களைச் சந்தித்து பேச வேண்டும் எனவும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டதாகவும், அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச இந்த விளக்கத்தை ட்விட்டரில் கொடுத்துள்ளார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement