JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 96, ராகுல் 80, கோலி 78, ரோகித் 42 ரன்களை குவித்தனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஆதம் ஜம்பா 3, ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Image

341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 98, லபுஷேன் 46, ஃபிஞ்ச் 33, அகர் 25 என ரன்களை குவித்தனர்.

இந்திய அணியை பொறுத்தவரை ஷமி 3, ஜடேஜா, சைனி, குல்தீப் ஆகியோர் தலா 2, பும்ரா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என சமநிலை வகிக்கின்றன.

ஞாயிறுக்கிழமை நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்ற உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement: