2025க்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமேசான் திட்டம்

Amazon-to-create-a-million-jobs-in-India-by-2025

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.


Advertisement

ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், சரக்கு போக்குவரத்து, உட்கட்டமைப்பு, சில்லறை வணிகம், திறன் மேம்பாடு, உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பை வழங்க இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Amazon founder and CEO Jeff Bezos at Amazon SMBhav summit in New Delhi on Wednesday (Photo: ANI)


Advertisement

இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களில் 7 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக இரு நாள்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் ( Jeff Bezos) அறிவித்திருந்தார். முதலீடு செய்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகவும் ஜெஃப் பெசோஸ் தெரிவித்திருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement