[X] Close >

“விவாகரத்து.. மன உளைச்சல்.. குடிப்பழக்கம்..” - விஷ்ணு விஷால் மீண்ட கதை

Vishnu-Vishal-s-transformation-after-divorce--injury--alcoholism-and-depression

விவாகரத்து, மன உளைச்சல், குடி, அறுவைச் சிகிச்சை என அடிமேல் அடி விழுந்த வாழ்க்கையில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.


Advertisement


நடிகர் விஷ்ணு விஷால், தற்போது ‘எஃப்ஐஆர்’ படத்தில் நடித்து வருக்கிறார். இந்தப் படத்தின் முழுமையான தலைப்பு ஃபாசில் இப்ராஹிம் ரியாஸ். அதைச் சுருக்கியே ‘எஃப்ஐஆர்’ என வைத்துள்ளனர். இதனை மனு ஆனந்த் இயக்கி வருகிறார். இவர் இயக்குநர் கவுதம் மேனனிடம் அசோசியேட் ஆக இருந்தவர். அதன் பின் தனியே வந்து இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.


Advertisement

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான அறிக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், இந்தப் பெரிய கடிதத்தை பகிர்வதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். ஆனால் என் மனதில் உள்ள அனைத்தையும் நன்பர்களான உங்களிடம் மற்றும் ரசிகர்களிடம் தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். 2018 ஆண்டு இறுதியில் தனது மனைவியை முறைப்படி விவாகரத்து செய்தபின் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் தனித்து வாழவேண்டி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்த நேரத்தில் அவரது மகன் பிறந்து சில மாதங்களே கடந்திருந்ததாகவும் அதனை சமாளிக்க முடியாமல் இருந்ததாகவும் வேதனை பொங்க கூறியுள்ளார்.

இது போதாது என்று திடீரென்று ‘காடன்’ படப் பிடிப்பில் முதுகெலும்பில் அடிப்பட்டதாகவும் அதனால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு சில மாதங்கள் அதிக சிரமங்களை அனுபவித்ததாகவும் கூறிய விஷ்ணு விஷால், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி மதுவிற்கு ஆட்பட்டதாகவும் அது தன்னை இரவு பகல் பாராமல் அடிமைப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ‘வாரணம் ஆயிரம்’ படப் பாணியை பின்பற்றி எப்படி மீண்டேன் என்று அவர் பேசியிருக்கும் விஷயங்கள் உண்மையில் உற்சாகமான தன்னம்பிக்கை தரும் கதையாக உள்ளது.


Advertisement

இந்தக் கடிதத்துடன் விஷ்ணு மூன்று படங்களையும் வெளியிட்டுள்ளார். அதில் மோசமான உடல் எடையையும் மனச் சிதைவையும் அடைந்த பின் இன்று எப்படி மீண்டு வந்துள்ளேன் என்பதை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். எந்த ஒரு நடிகரும் இவ்வளவு வெளிப்படையாக சொந்தக் கதைகளை பொதுவெளியில் பேச மாட்டார்கள். அந்த மனத்தடை எதுவும் இல்லாமல் உண்மையை உரக்க கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.

இந்தக் கடிதத்தில் ‘வாரணம் ஆயிரம்’ வழியை மேற்கொண்டு மீண்டதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளதற்கு இயக்குநர் கவுதம் மேனன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உங்களது கடிதம் உத்வேகமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close