JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

தவான், விராட், ராகுல் அதிரடி : ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் இலக்கு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்ப இந்திய அணியின் பேட்டிங் அமைந்தது.

image

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 42, ஷிகர் தவான் 96 ரன்கள் எடுத்தனர். கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி 78 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த ஒருநாள் போட்டியிலும் ஸம்பா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி விராட் கோலி ஆட்டமிழந்தார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் ஸம்பா உடன் விராட் கோலி விளையாடியுள்ளார். இதில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் அவர் ஸம்பாவிடம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

   image

பின்னர், களமிறங்கிய கே.எல்.ராகுல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இறுதிவரை இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கே.எல்.ராகுல் 80 ரன்கள் நிலையில் இறுதி ஓவரில் ரன் அவுட் ஆகினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 20 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸம்பா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிச்சர்சன் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement: