JUST IN

Advertisement

சோதனை முயற்சியை கைவிட்டு மீண்டும் 3-வது இடத்தில் களமிறங்குவாரா கோலி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.


Advertisement

விராட் கோலி ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் 3-ஆம் நிலை வீரராகவும், டெஸ்ட் போட்டிகளில் 4-ஆம் நிலை வீரராகவும் விளையாடுவார். இந்த நிலைகளில் விளையாடி ஏராளமான சாதனைகளையும் படைத்து வருகிறார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, விராட் பின் கள வரிசையில் இறங்கினார்.

அதேபோல், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 4-ஆம் நிலை வீரராக களம் இறங்கினார். கே.எல்.ராகுல் 3-ம் நிலை வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுத்தார். கே.எல்.ராகுல் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், இது கிரிக்கெட் உலகில் பெரும் விமர்சனங்களை கிளப்பியது. ஏனெனில், முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் சொதப்பியது.


Advertisement

image

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று ராஜ்கோட்டில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது என்ற முயற்சியை அவர் இந்தப் போட்டியில் எடுக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. கோலி மூன்றாவது இடத்தில் இறங்கும் பட்சத்தில், கே.எல்.ராகுல் நான்காவது நிலையில் ஆடுவார்.

image


Advertisement

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 256 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி எட்டி வெற்றிப் பெற்றது. வார்னர், ஆரோன் பின்ச் அசத்தலாக விளையாடி சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றையப் போட்டியில் இந்திய அணி விளையாடும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement