‘விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு’ - ஈரானுக்கு 5 நாடுகள் கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரானுக்கு கனடா உள்ளிட்ட 5 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.


Advertisement

ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமான் கொல்லப்பட்டார். மேலும், சில முக்கிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் அசாதாரண சூழல் நிலவியது.

இத்தகைய பதட்டமான சூழலில், கடந்த ஜனவரி 8-ஆம் தேதி டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானத்தை அமெரிக்க போர் விமானம் என கருதி ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 57 பேர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். முதலில் தாக்குதல் நடத்தப்பட்டதை மறுத்த ஈரான், பின்னர் சர்வதேச நெருக்கடியை தொடர்ந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியது தாங்களே என கடந்த சனிக்கிழமை ஒப்புக் கொண்டது.


Advertisement

image

எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி - வெளியானது ‘தலைவி’ புகைப்படங்கள்

இந்நிலையில், விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரானுக்கு கனடா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், சுவீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. லண்டனில் இந்த 5 நாடுகளின் பிரதிநிதிகள், கூட்டாக ஆலோசனை நடத்திய பின்னர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.


Advertisement

    image


ஒரு லெஜெண்டுக்கு இப்படியா விடை கொடுப்பீர்கள்..! ஆதங்கப்படும் தோனி ரசிகர்கள் 


விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களை உரிய முறையில் அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் 5 நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement