எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி - வெளியானது ‘தலைவி’ புகைப்படங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகி வரும் "தலைவி" திரைப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘தலைவி’ படத்தில் இடம்பெறும் எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

Image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 3 ஆண்டுகளுக்கு முன்பு 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்று பலரும் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இத்தப் படத்திற்காக கங்கனா தமிழ் மற்றும் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு வருகிறார்.


Advertisement

Image

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது நெருங்கிய தோழியான சசிகலாவின் கதாப்பாத்திரம் இன்றி கூற இயலாது என்பதால் அந்த கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சசிகலாவின் கதாப்பாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

Image


Advertisement

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தோடு பொருந்துவதற்காக அரவிந்த் சாமி க்ளீன் ஷேவ் செய்து நடித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. புகைப்படத்தில் பார்ப்பதற்கு அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே அரவிந்த் சாமி இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement