வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-30 இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


Advertisement

Image

பிரான்சின் பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய முகமையின் ஏரியேன்-5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக இந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.


Advertisement

Image

3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் DTH, டிஜிட்டல் சேவை உள்ளிட்டவைகளுக்கு உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement