[X] Close >

ஒரு லெஜெண்டுக்கு இப்படியா விடை கொடுப்பீர்கள்..! ஆதங்கப்படும் தோனி ரசிகர்கள்

End-of-the-MS-Dhoni-era--Former-captain-not-given-BCCI-central-contract

தோனியை மீண்டும் இந்திய அணியின் சீருடையில் பார்த்துவிடலாம் என ஏக்கத்தில், ஏதோ ஒரு நம்பிக்கையில் இருந்த அவரது ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியையும், சோகத்தையும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். ஆம், பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை என்ற செய்தியை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


Advertisement

image

இந்திய அணியைப் பொறுத்தவரை கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி ஆகிய நான்கு பிரிவுகளில் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிரிவுக்கு தகுந்தவாறு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற வருடம் வரை தோனி கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெற்றிருந்தார். அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஏ+ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. கிரேடு ஏ+ பட்டியலில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.


Advertisement

image

பிசிசிஐ-யோட செய்தி வெளியானது முதல் தோனியின் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் கொட்டி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம், தோனி தன்னுடைய ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், ஒப்பந்தப் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்பதுதான். அப்படியே, தோனியின் சகாப்தத்தை பிசிசிஐ முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவே தெரிகிறது.

              image


Advertisement

தோனியின் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களின் கோரிக்கை என்னவென்றால், இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகள் புரிந்த தோனிக்கு முறையாக ஃபேர்வெல் போட்டி நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ஏதேனும், ஒரு தொடரில் தோனிக்கு வாய்ப்பு கொடுத்து முறையாக அவரை வழியனுப்புவதே ஒரு லெஜெண்டுக்கு கொடுக்கும் மரியாதை என்றே அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். சும்மாவா பின்ன, டி20, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அவ்வளவு சாதனைகளை தோனி தலைமையிலான அணி படைத்துள்ளது.

image

இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்தே தோனிக்கு பதிலாக மாற்று வீரரை தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்க்கு முக்கியத்துவம் அளித்து வந்தது. ஆனால், ரிஷப் பண்ட் ஒரு நல்ல விக்கெட் கீப்பராகவோ, தேர்ச்சியான பேட்ஸ்மேனாகவோ இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை என்பதே உண்மை. அதனால், ரிஷப் பண்ட்டை நம்பி டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்காமல், நிச்சயம் தோனியை கொண்டு வருவார்கள் என்றே எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், ஒப்பந்த பட்டியலில் அவர் பெயர் இல்லாதது, தோனி நிச்சயம் விளையாட மாட்டார் என்பதையே காட்டுவதாக தெரிகிறது.

image

அத்துடன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தோனி நிச்சயம் டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்து வந்தார். அப்படியிருக்கையில், ஐபிஎல் தொடர் வருவதற்கு முன்பே இப்படியொரு செய்தி வெளியாகியிருக்கிறது.

உடல் தகுதியைப் பொறுத்தவரை தோனி இன்னும் வலிமையுடன் தான் இருக்கிறார். இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் அவரது சுறுசுறுப்பு உள்ளது. இதனை மைதானத்தில் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், பேட்டிங் செய்யும் விதத்தில்தான் கொஞ்சம் மந்தம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வந்தன. இருப்பினும், 2019ஆம் ஆண்டு தொடக்கத்தை 4 அரைசதத்துடன் வரவேற்ற தோனி, அந்த வேகத்தை உலகக் கோப்பையில் காட்டவில்லை. இப்படி விமர்சனங்கள் இருந்தாலும், ஓய்வு பெறும் நிலைக்கு அவர் வந்துவிட்டாரா என்பது கொஞ்சம் சந்தேகம் தான்.

image

தோனி கடைசியாக இந்திய அணியின் சீருடையில் விளையாடியது, உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டிதான். அந்தப் போட்டியில் அவரது ரன் அவுட்தான் திருப்புமுனை. தோனி களத்தில் இருந்தவரை இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. அதுதான் தோனி. தோனி களத்தில் இருக்கும் வரை வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையும் இருக்கும். ரன் அவுட்டுடன் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய தோனி இந்த ரன் அவுட் உடன் வாழ்க்கையை முடித்துவிட்டாரா என ரசிகர்கள் வருத்தத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.

image

இனி தோனி ரசிகர்களுக்கு இருப்பது ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடரில் தோனியின் விளையாட்டை காண ரசிகர்கள் இன்னும் கூடுதலான ஏக்கத்தில் காத்திருப்பார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close