‘பின் மண்டையில் கோலியின் உருவம்’ - வைரலான இளைஞர் புகைப்படம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விராட் கோலியின் உருவத்தை தலையில் வரைந்து கொண்டு வந்த இளைஞரின் புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது.


Advertisement


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் வெறித்தமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு வெறித்தனமான இந்திய ரசிகர் கடந்த செவ்வாய் கிழமையன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் ஆட்டத்தை காண வந்தார். அவரைக் கண்ட பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

Image


Advertisement

விராட் கோலியின் முகத்தை அப்படியே தனது தலையில் சிகை அலங்காரம் மூலம் அப்படியே வரைந்திருந்தார். சிராக் கிளாரே என்ற அந்த ரசிகர், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நேரில் கண்டு மகிழ்ந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் விராட் கோலியை டேக் செய்து “சிறந்தவரான விராட் கோலி இதயத்திலிருந்து தலைக்கு” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

image

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு சிராக் பேசியிருந்தார். அதில் அவர் இந்திய அணி கேப்டன் மீதான தனது அபிமானத்தைப் பற்றி குறிப்பிட்டார். “பல ஆண்டுகளாக கோலியின் ஒவ்வொரு பேட்டியையும் விடாமல் கண்டு ரசிக்கிறேன். அவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக ஆனதிலிருந்தே அவருக்கு நான் ரசிகராக இருந்து வருகிறேன்” என்று அவர் கூறினார்.


Advertisement

Image

மேலும் அவர் “கோலியை நேரில் சந்திப்பதே எனது வாழ்நாள் கனவு. நான் அவரைச் சந்திக்கும் போது, முதலில் அவரது கால்களைத் தொட்டு வணங்குவேன். அவரைக் கட்டிப்பிடித்து மகிழும் அந்தத் தருணத்தை ஒரு புகைப்படமாக எடுப்பேன்” என்றார். இவர் தன் தலையில் கோலியின் படத்தை வரைய ஆறு முதல் எட்டு மணிநேரம் பிடித்தது என்றும் கூறியுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement