JUST IN
  • BREAKING-NEWS ‌குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் பாலசுந்தர்ராஜ் என்பவரை கைது செய்தது சிபிசிஐடி
  • BREAKING-NEWS ‌நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
[X] Close

‘350 அடிக்கு அம்பேத்கர் சிலை’ - மகாராஷ்டிர அமைச்சரவை முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிராவில் 350 அடி உயரத்திற்கு அம்பேத்கர் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் 350 அடி உயரத்திற்கு அம்பேத்கர் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏற்கனவே 250 அடியில் சிலை அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அது தற்போது 350 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

image

அத்துடன், சிலைக்கு கீழ் பகுதியில் 100 அடிக்கு அம்பேத்கர் நினைவகம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது. இதனால், மொத்த உயரம் 450 அடி ஆகும்” என்றார். மேலும், இந்த சிலை 2 வருடங்களில் அமைக்கப்படும் என்றும் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

Advertisement:
[X] Close