JUST IN
  • BREAKING-NEWS ‌ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
  • BREAKING-NEWS ‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு
  • BREAKING-NEWS ‌அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
[X] Close

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை : துரைமுருகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஆண்டுதோறும் நடைபெறும் தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் அது வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டிஆர் பாலு கூறினார். நான் பதிலே சொல்லிவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

Image result for கே.எஸ்.அழகிரி

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனது கருத்தால் திமுக உடனான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் கருத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன். எனது அறிக்கைக்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது கூட ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். திமுக தலைமை அறிவுறுத்தியும் உள்ளாட்சி தேர்தலில் சில இடங்கள் ஒதுக்கப்படவில்லை. காலம் எப்போதும் நல்ல பதிலைத்தான் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
[X] Close