கேரளாவில் வடமாநில இளைஞர் மர்ம மரணம்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பள்ளிக் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.


Advertisement

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாதங்களாக தங்கி, பள்ளிக் கட்டட வேலைகளில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கமல்தாஸ் (32) என்ற வாலிபர் ஈடுபட்டு வந்துள்ளார். அவருடன் ஐந்து பேர் கட்டடப் பணி செய்து வந்துள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில் வாலிபர் கமல்தாஸ் இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி வளாகத்திற்குள் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நிகழ்விடம் சென்ற கேரள குமுளி போலீஸார், கமல்தாஸ் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கமல்தாஸின் உடலில் காயங்கள் இருப்பதும், உடன் இருந்தவர்கள் தலைமறைவாகியதும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதனை சந்தேக மரணம் எனக்கூறி வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

image


Advertisement

இந்நிலையில் கட்டப்பனை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்மோகன் உத்தரவின்படி, குமுளி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தனிப்படை அமைத்து தேடியதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமர்சிங் (23), போவேந்தர் (22) ஆகிய இருவர் கட்டப்பனையில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் இருவரும் கமல்தாஸுடன் கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்தபோது சம்பளம் பிரச்னையில் தகறாறு ஏற்படவே இருவரும் சேர்ந்து கமல்தாஸை அடித்துக் கொலை செய்துவிட்டு இதர நண்பர்களுடன் தலைமறைவானது தெரியவந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தொடுபுழா சிறையில் அடைக்கப்பட்டனர். 

loading...
Related Tags : A building workerdeath in Kerala

Advertisement

Advertisement

Advertisement