‘மிஸ் யூ தோனி’ - ஏக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்

Mumbai-crowd-chants----Dhoni-Dhoni----after-KL-Rahul-fumbles-behind-the-wickets-vs-Australia

India at Wankhede against Australia in ODI


Advertisement

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் இருவரும் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்யும் இந்திய அணியின் முயற்சிக்கு இறுதிவரை பலன் கிட்டவேயில்லை.

image


Advertisement

இந்தியாவை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா - 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசுர வெற்றி 


இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் நிறையவே வருத்தமடைந்துவிட்டனர். தோல்விக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். பந்துவீச்சு மோசமாக இருந்ததை பலரும் குறிப்பிட்டனர். அத்துடன், விராட் கோலி வழக்கம் போல் மூன்றாவது நிலையில் களமிறங்க வேண்டும், ரிஷப் பண்ட்க்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், இலங்கைக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய சைனியை தேர்வு செய்திருக்கலாம்.

image


Advertisement

இருப்பினும், ட்விட்டரில் அதிகம் ஆக்கிரமிப்பு செய்தது தோனியை பற்றிய கருத்துக்கள்தான். தோனி குறித்த பல்வேறு தகவல்களை அவர்கள் பதிவிட்டனர். அதிகம்பேர் பகிர்ந்தது, வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி நான்கு முறை ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், ஒரே ஒரு முறைதான் வெற்றி பெற்றுள்ளது. அது, தோனி தலைமையிலான இந்திய அணிதான்.

image

அத்துடன், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவுவது அரிதுதான். கவாஸ்கர் (1981), சச்சின் (1997), கங்குலி (2000), டிராவிட் (2005), விராட் கோலி (2020) ஆகியோர் தலைமையிலான அணி இதுபோன்ற மோசமான தோல்வியை தழுவியிருக்கிறார்கள். ஆனால், தோனி மற்றும் கபில்தேவ் தலைமையிலான அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்ததில்லை என பலரும் கூறியிருந்தனர்.

image

மேலும், அதிக அளவில் பலரும் கூறியிருந்தது, இதுபோன்ற இக்கட்டான சூழலில் இந்திய அணியை பலமுறை தோனி கரைசேர்த்திருக்கிறார் என்ற கருத்துதான். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி ஒன்றினையே பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

image

மிடில் ஆர்டர் சரியும் போதெல்லாம் தோனி ஒரு சுவர் போல் இருந்து இந்திய அணியை பல முறை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார் என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement