‘மிடில் ஆர்டரில்’ சொதப்பிய இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு 256 ரன்கள் இலக்கு

After-being-put-to-bat-first--Team-India-are-all-out-for-255-in-49-1-overs

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் உடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் அடித்தார். ஆனால், கே.எல்.ராகுல் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை நழுவ விட்டார். கே.எல்.ராகுல் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 134 ரன்களுக்கு இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து வலுவான நிலையில்தான் இருந்தது. ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன.


Advertisement

image

சிறப்பாக விளையாடி வந்த தவான் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி, 16 (14) ரன்களில் நடையை கட்டினார். ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்னில் வந்த வேகத்தில் வெளியேறினார். 164 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில், ரிஷப் பண்ட் - ஜடேஜா ஜோடி சற்று நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும், ஜடேஜா 25, பண்ட் 28 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஷர்குல் தாக்கூர் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் விளாசி 13 ரன்னில் அவுட் ஆனார்.

image


Advertisement

“வாடகை கட்டக்கூட காசு இல்லை” - பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் தவிக்கும் மூதாட்டி..! 


இறுதியில், ஷமி - குல்தீப் ஜோடி சேர்ந்து சற்று நேரம் தாக்குப்பிடித்தனர். குல்தீப் 15 பந்துகளில் 17 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். ஷமி 10 ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணி 49.1 ஓவர்களுக்கு 255 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

         image

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டையும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement