முடிவுக்கு வருகிறதா திமுக - காங்கிரஸ் கூட்டணி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுகவை விமர்சித்து கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வரும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

திமுக - காங்கிரஸ் கூட்டணி இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. இதையடுத்து 5 பதவிகளுக்கான தேர்தலுக்கு முன்னதாக கே.எஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக கூட்டணி தர்மத்தை மீறுவதாகவும் உரிய இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன், 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் 2 இடங்கள் மட்டுமே திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது எனவும் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

image


Advertisement

இதையடுத்து சோனியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து திமுகவின் டி.ஆர்.பாலு கூறுகையில், திமுக தலைவரை விமர்சித்திருக்கும்போது எப்படி கூட்டத்தில் பங்கேற்க முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் அதிருப்தி இருந்தால் ஸ்டாலினிடம் நேரில் பேசியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சோனியா காந்தியை சந்தித்த கே.எஸ் அழகிரி, பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “ திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள். நானும் ஸ்டாலினும் மிகவும் நெருக்கமானவர்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையாது. பிரிய வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார். இதனிடையே திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுவும் செய்தியாளர்களை சந்திக்கையில், திமுக-கூட்டணி குறித்து காலம் முடிவு செய்யும் எனவும் கே.எஸ். அழகிரி அறிக்கை விட்டிருக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

image


Advertisement

டி.ஆர்.பாலு திமுகவில் ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுவதால் திமுக - காங்கிரஸ் கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement