JUST IN
  • BREAKING-NEWS ‌ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
  • BREAKING-NEWS ‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு
  • BREAKING-NEWS ‌அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
[X] Close

‘விராட் கோலி சிறந்த வீரர் ஆனால் ...’ - பாக். முன்னாள் பேட்ஸ்மேன் சொன்னது என்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விராட் கோலி ஆட்டத்தை பற்றி பாக். முன்னாள் பேட்ஸ்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாகீர் அப்பாஸ் அவரது தலைமுறையில் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர். மேலும் இவர் கோலி குறித்து ஒரு கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும், ரோஹித் சர்மாவின் ஆட்ட நுணுக்கத்தை பார்க்கும் போது கோலியைவிட மிகவும் திருப்திகரமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

image

ஜாகீர் பேசும்போது “கோலி ஒரு சிறந்த வீரர்தான். ஆனால் ரோஹித் சர்மாவின் ஆட்ட நுணுக்கம் பார்ப்பதற்கு எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. ஒரு ஷாட்டை உருவாக்கும் விதத்தில் அவரது கலை வெளிப்படுகிறது. இது கோலியிடம் இல்லாத ஒன்று ”என்று அப்பாஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் மேலும் ரோஹித் பேட்டிங் செய்வதை தான் பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார், “அவர் விளையாடும்போது, நான் ஒருபோதும் என் டிவியை அணைக்க மாட்டேன். கோலி இப்போது இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார், ஆனால் ரோஹித்தின் ஆட்ட நுணுக்கங்களை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இரண்டு பேட்ஸ்மேன்களையும் காண்பதே அருமைதான்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement:
[X] Close