JUST IN
  • BREAKING-NEWS ‌எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட அல் உம்மாவை சேர்ந்த மெகபூப் பாஷா கைது
  • BREAKING-NEWS ‌மத்திய அமைச்சர்கள் 36 பேர் இன்று முதல் 23-ஆம் தேதி வரை காஷ்மீர் பயணம்
[X] Close

மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தவரை கொலை செய்த கணவர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரியலூர் அருகே மனைவியிடம் பேசியவரை அடித்து கொலை செய்த கணவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி.
இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொளஞ்சிக்கும், ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது கைகலப்பாக மாறி கொளஞ்சி குடும்பத்தினர் ரவியை தாக்கியதாக தெரிகிறது.

Image result for கொலை

இதில் படுகாயமடைந்த ரவி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் கொளஞ்சி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
[X] Close