JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

வேலூரில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்விரோதம் காரணமாக வேலூரில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்(22). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டைக்கு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஐயப்பனை அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.

image

இந்தச் சண்டையில் அவரைக் கீழே தள்ளிய மர்மநபர்கள் கத்தி மற்றும் கல்லைக் கொண்டு தாக்கியதாக தெரிகிறது. இதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த 2 பேரும் தப்பியோடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறையினர் இந்தக் கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடியும் வருகின்றனர்.

image

இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் சைதாப்பேட்டை பகுதியில் இரவில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகவும் அப்போது மது வாங்க வந்த இடத்தில் கடந்த 12 ஆம் தேதி இரவு ஐயப்பனுக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
[X] Close