டயர் வெடித்ததில் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய கார் - 4 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் டயர் திடீரென வெடித்ததில் கார் நிலைதடுமாறி எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்றது.

அந்த சாலையில் வந்த தனியார் பேருந்து சற்றும் எதிர்பாராததால் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் ஓட்டுநர், 2 பெண்கள் ஒரு குழந்தை என 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


Advertisement

image

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒரு குழந்தை தீவீர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்கள் பற்றிய எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை.


Advertisement

சபரிமலை தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்

loading...

Advertisement

Advertisement

Advertisement