கடலூரில் விடிய விடிய கருவாட்டுச் சந்தை: ஒரே இரவில் ரூ.1கோடி வரை விற்பனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூரில் விடிய விடிய ‌நடைபெற்‌ற கருவாட்டுச் சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்


Advertisement

காராமணிக்குப்‌பத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் கருவாடு, காய்கறிச் சந்தை பிரபலமானது. வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு தொ‌டங்கும் சந்தையானது, பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு 1 மணிக்கே தொடங்கியது. கடலூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு‌ மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

image


Advertisement

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் கருவாடுகளை‌ வாங்க சில்லறை வியாபாரிகளும், பொது‌மக்களும் குவிந்தனர். டீசல் விலை உயர்வு மற்றும் மீன்க‌ள் வரத்துக் குறைவால் கருவாடு விலை அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் ஜிஎஸ்டியால் கடந்த ஆண்டு‌ விற்பனை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜிஎஸ்டி தளர்வு காரணமாகவும் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

image

காலை 6 மணிவரை நடைபெற்ற இன்றைய சந்தையில் சுமார் 1 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

போதை மாத்திரைக்காக செல்போன் பறிப்பு: டிக்டாக் வீடியோவால் சிக்கிய சிறுவர்கள்!


 

loading...

Advertisement

Advertisement

Advertisement