JUST IN
  • BREAKING-NEWS ‌கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை
  • BREAKING-NEWS ‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி உயர்நீதிமன்றக் மதுரை கிளையில் புதிய மனு
  • BREAKING-NEWS ‌எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
[X] Close

‘சிஏஏவை விமர்சிப்பவர்களுடன் தொலைக்காட்சியில் பிரதமர் விவாதிக்க வேண்டும்’ - ப.சிதம்பரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடியுரிமை சட்டம் குறித்து பிரதமர் மோடி நேரடியாக விமர்சகர்கள் 5 பேருடன் விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சிஏஏ என்பது குரியுரிமை கொடுப்பதே அன்றி, அதனை பறிப்பது அல்ல என்று பிரதமர் கூறுகிறார். என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி உடன் தொடர்புடையதாக கருதப்படும் சிஏஏ, ஏராளமானோரை குடியுரிமை அற்றவர்கள் ஆக்கும் என்றும் குடியுரிமையை அவர்களிடம் இருந்து பறிக்கும் என்றும் என்னைப்போன்ற பலரும் நம்புகிறோம்.

 

image

கேள்விகள் கேட்க முடியாத அமைதியான மக்களிடம் உயர்தளங்களில் இருந்து மட்டுமே மோடி பேசுகிறார். நாங்கள் ஊடகங்கள் வாயிலாக பேசுகிறோம். ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிறோம். விமர்சகர்களுடன் மோடி பேசுவதில்லை; மோடியுடன் பேச விமர்சகர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை.


"காட்டுத்தீ பிரச்னையை முறையாக கையாளவில்லை" ஆஸ்திரேலிய பிரதமர்


குடியுரிமை சட்டம் குறித்து பிரதமர் மோடி நேரடியாக விமர்சகர்கள் 5 பேருடன் விவாதிக்க வேண்டும். தொலைக்காட்சி விவாதத்தில் மோடி பேசுவதை கேட்டு சிஏஏ பற்றி மக்களே முடிவெடுக்கட்டும். எனது பரிந்துரைக்கு பிரதமர் மோடி செவி சாய்ப்பார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
[X] Close