[X] Close >

குப்பை தொட்டிக்குள் இருந்து திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டு - ஒருவர் படுகாயம்

Hand-bomb-burst-from-Trash-box-in-Puducherry---One-person-injured

புதுச்சேரியில் உள்ள குப்பை தொட்டியில் திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி படுகாயமடைந்தார்.


Advertisement

புதுச்சேரி முத்தியால்பேட்டை காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில், குப்பை சேகரிக்கும் தொழிலாளி செல்வராஜ் வழக்கம்போல இன்று காலை பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது குப்பை தொட்டியில் இருந்த மர்ம பொருள் ஒன்று திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது. இதனால் தொழிலாளி செல்வராஜுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image


Advertisement

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார், குப்பை தொட்டியை ஆய்வு செய்தனர். இதில் அதிக சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள், நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதுமாக சோதனை செய்யப்பட்டது.

image

கடந்த மாதம் இதே பகுதியில் ரவுடிகளால் வெடிகுண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அதே பகுதியில் மீண்டும் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

துபாயில் கனமழை : 4 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close