கொச்சியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சொகுசு குடியிருப்பு கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இந்தப் பணிகளை மும்பை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் மேற்கொண்டன.
கொச்சியில் சுற்றுச்சூழலுக்கான சட்ட விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய வழக்கில் சில கட்டடங்கள் சிக்கின. கொச்சியின் மராடு நகராட்சி பகுதிக்கு உட்பட்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத்திலுள்ள ஒரு வீட்டின் சந்தை மதிப்பு 50 லட்சம் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை ஆகும். இந்த அடுக்குமாடி கட்டடம் நீர்நிலைகளை சுமார் 60 மீட்டர் அகலத்திற்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. அவற்றை இடிக்க கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் இங்கு வசித்து வந்தவர்கள் காலி செய்யப்பட்டனர். நவம்பர் மாதத்தில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த எண்டிஃபைஸ் நிறுவனமும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஸ்டீல்ஸ் அண்ட் எக்ஸ்ப்லோசிவ் என்ற நிறுவனமும் இணைந்து கட்டடத்தை இடிக்கும் பணிகளை மேற்கொண்டன. ஒரு வாரத்துக்கு முன்பே கட்டடத்தைச் சுற்றி 200 மீட்டர் விட்டத்தில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். கட்டடத்தின் உள்ளே 943 கிலோ எடையில் வெடிபொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டன.
எச் 2 ஓ ஹோலி ஃபெய்த் மற்றும் ஆல்ஃபா செரீன் ஆகிய இரு கட்டடங்கள் அடுத்தடுத்து வெடிவைத்து தகர்க்கப்பட்டன. சிறுகச் சிறுக சேமித்தும், கடன் பெற்றும் வாங்கிய பலரது கனவு வீடுகள் நொடிப்பொழுதில் தரைமட்டமாக்கப்பட்டன. தகர்க்கும் போது கட்டட இடிபாடுகள் உட்புறமாகவே விழும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது வெளியான புகை சுமார் 20 மீட்டர் தொலைவுக்கு அப்பால் பரவாத வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்டடங்களை இடிக்க 2 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவிடப்படப்பட்டுள்ளது. 343 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணத் தொகை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபகுதியில் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்ட jains coral cove மற்றும் golden kayaloram ஆகிய இரு அடுக்குமாடி கட்டடங்களும் இடிக்கப்பட உள்ளன.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!