மறைமுக தேர்தல் நடந்த 26 மாவட்ட ஊராட்சிகளில் அதிமுக அணி பதினான்கிலும் திமுக பன்னிரெண்டிலும் வெற்றி. சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் தேர்தல் தள்ளிவைப்பு.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் ஆதரவுடன் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக. கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில் அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பம்.
ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் அதிமுக அணி 150 இடங்களிலும், திமுக அணி 133 இடங்களிலும் வெற்றி. துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக அணி 124 இடங்களிலும் திமுக அணி 119 இடங்களிலும் வெற்றி.
வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது திமுகவின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம். காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் காவல்துறை டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு. மறைமுகத் தேர்தலின்போது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் பொங்கல் விடுமுறையா? முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது. கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி திட்டவட்டம்.
இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் பதவியையும் தூக்கியெறிய தயார். கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு.
காவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொன்ற கொலையாளி குறித்து தகவல் அளித்தால் சன்மானம். 7 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு.
மத்திய அரசு வெளியிட்ட நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு முதலிடம். அண்ணா பல்கலைக்கழகம் 7வது இடத்தையும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 14வது இடத்தையும் பிடித்தன.
பிரிட்டன் தூதரை ஈரான் அரசு திடீரென கைது செய்ததால் உச்சக்கட்ட பரபரப்பு. போராட்டத்தை தூண்டும்வகையில் செயல்பட்டதாக கூறி நடவடிக்கை.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?