நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் நபர் தேர்வு..!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் நபர் தேர்வு..!
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் நபர் தேர்வு..!

நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யும் நபரை திகார் சிறை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங் (32), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் சிங் (31), பவன் குப்தா (25) ஆகியோரை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, குற்றவாளிகளை தூக்கிலிடும் நபரை தேர்வு செய்யும் பணியில் திகார் சிறை நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜாலத் என்பவர் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது குடும்பமே தூக்கிலிடும் பணியை மேற்கொண்டு வந்தவர்கள் ஆவர். தற்போது 4வது தலைமுறையாக பவன் அந்த பணியை செய்து வருகின்றார். பவன் தூக்கிலிடும் பணியை செய்யும் குடும்பத்திலிருந்து வந்ததால், அவரை நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் என்கின்றனர் சிறை நிர்வாகம். ஏனென்றால் மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பதால் எந்த வித பிழைகளும் தூக்கிலிடும் போது ஏற்படாது. அத்துடன் உடல் தகுதியிலும், கண் பார்வையிலும் அவர் சிறந்து விளங்குவதால் அவரை தேர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து பவன் கூறும் போது, “இதற்காக நான் சில மாதங்களாக காத்திருக்கிறேன். இறுதியாக கடவுளுக்கு எனது வேண்டுதல் கேட்டுவிட்டது” என்று தெரிவித்தார். அண்மையில் திகார் சிறைக்கு அழைத்து வரப்பட்ட பவனிற்கு, தூக்கு மேடை உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்து காண்பிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு தனி அறை ஒன்று தங்குவதற்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது பாதுகாப்பை சிறை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com