JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

சமூக பிரச்னைக்காக ட்விட்டர் ஹேஸ்டேக்: விஜய் வார்த்தையை நிஜமாக்கிய ரசிகர்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #MasterHelmetAwareness என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களை கொண்டாடுவதாக நினைத்துக்கொண்டு ட்விட்டரில் மற்ற நடிகர்களை தரம் தாழ்த்தி பேசுவது வாடிக்கையாகவே உள்ளது. இதனை எந்த நடிகர்களும் விரும்புவதில்லை என்றாலும் ரசிகர்கள் அதனை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறார்கள். பிகில் திரைப்பட இசைவெளியீட்டின் போது நடிகர் விஜய், ரசிகர்கள் சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து ட்விட்டரில் ட்ரெண்டு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

image

 

இந்நிலையில் நடிகர் விஜயின் வார்த்தையை அவரது ரசிகர்கள் நிஜமாக்கியுள்ளனர். தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியத்தை குறிப்பிடும் விதமாகவும், தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ட்விட்டர் ட்ரெண்டிங் செய்துள்ளனர்.

image
#MasterHelmetAwareness என்ற ஹேஸ்டேக் மூலம் தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த ஆக்கப்பூர்வமான ட்ரெண்டிங்குக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
[X] Close