மம்தா பானர்ஜி உடன் பிரதமர் மோடி சந்திப்பு - ‘வலுத்த போராட்டங்கள்’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.


Advertisement

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்க மாநிலம் சென்றுள்ளார். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

         image


Advertisement

கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. மேற்கு வங்க மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மம்தா உடனான மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சிஏஏவுக்கு எதிராக ஆளும் திரிணாமூல் மற்றும் இடதுசாரி கட்சிகள் முழுவீச்சில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

image

இதனிடையே, பிரதமர் மோடியின் வருகையையொட்டி அவருக்கு எதிராக #GoBackModiFromBengal என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. மோடி வருகைக்கு எதிராக கொல்கத்தாவிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. Go Back Modi என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் பலரும் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.


Advertisement

இதனிடையே, கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள 150வது ‘கொல்கத்தா போர்ட் ட்ரஸ்ட்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் ஒரே மேடையில் கலந்து கொள்ள உள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement