JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

முதல் நாளில் ரூ.4.25 கோடி மட்டுமே வசூல் செய்த ‘சாபக்’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான சாபக் படம் முதல் நாள் ரூ.4.25 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் தீபிகா படுகோன் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் சாபக். ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்து உயிர்பிழைத்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவே நடித்திருந்தார் தீபிகா. படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் சில மாநிலங்கள் சாபக் திரைப்படத்துக்கு வரிவிலக்கும் அளித்தன.

 

image

இதற்கிடையே, ஜேஎன்யூ கல்லூரிக்கு நேரில் சென்று மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த தீபிகா படுகோனுக்கு எதிர்ப்பு தெரிவித்த பலர், சாபக் திரைப்படத்தை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் சாபக்குக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டன. 
பரபரப்பான சூழலில் சாபக் வெளியான நிலையில், முதல் நாள் ரூ.4.25 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
BoxofficeIndia.com என்ற இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, சாபக் வெளியான முதல் நாளில் ரூ.4.25 கோடி வசூல் செய்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் என கூறப்படுகிறது.

image

நகரங்களில் உள்ள பெரிய திரையரங்குகளில் மட்டுமே வரவேற்பு பெற்றுள்ள நிலையில் சிறிய திரையரங்குகளில் வசூல் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


படத்திற்காக மெலிந்து போன பஹத் பாசில் - வியக்கும் ரசிகர்கள் !


 

Advertisement:
[X] Close