குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ‘காந்தி சாந்தி யாத்திரை’யை தொடங்கி உள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், நாடு முழுவதும் ‘அரசின் ஆதரவோடு நிகழும் வன்முறையை’ கண்டிப்பதற்காகவும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று மும்பையில் இருந்து புதுடெல்லிக்கு 3,000 கி.மீ. பேரணியை தொடங்கியுள்ளார். இந்த அணிவகுப்பை தெற்கு மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பு பேரணிக்கு ‘காந்தி சாந்தி யாத்திரை’எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய ஐந்து மாநிலங்களை கடந்து ஜனவரி 30 ஆம் தேதி காந்தி கொலை செய்யப்பட்ட நினைவு நாள் அன்று டெல்லி சென்று நிறைவடைய உள்ளது. இந்த அணிவகுப்பில் விவசாயிகள் உட்பட பல அமைப்புகள் பங்கேற்கின்றன என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம். நாங்கள் அரசியலமைப்பு சட்டப்படியே செல்வோம். காந்தியை யாரும் கொல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று பாஜகவின் முன்னாள் மத்தியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார். “அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கிறது. ஜே.என்.யுவில் நடந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவுகிறது. காந்திஜியின் அகிம்சை முறையுடன் அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்குப் பதிலளிக்க இருக்க வேண்டும்” என்று சரத் பவார் கூறியுள்ளார்.
சில வருடங்களாகவே ஆளும் பாஜக அரசை எதிர்த்து யஷ்வந்த் சிங்ஹா பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி