JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

தீபிகாவின் ‘ஸ்கில் இந்தியா’ விளம்பரத்தை நிறுத்திய மத்திய அரசு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தீபிகா படுகோன் நடிப்பில் உருவான ‘ஸ்கில் இந்தியா’ தொடர்பான ஒரு விளம்பரத்தை மத்திய அமைச்சகம் திடீரென்று நிறுத்தியுள்ளது.

டெல்லியிலுள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூரத் தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். பலர் ரத்தக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

Image result for deepika padukone jnu

இதனையடுத்து, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தாக்குதலுக்கு ஆளான மாணவர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு அளித்தார். மாணவர்களுக்கு ஆதரவளித்ததை ஒரு தரப்பினர் பாராட்டினாலும், இவர் மீதும் கடுமையான விமர்சனத்தை ஒரு தரப்பினர் முன்வைத்தனர்.

இந்நிலையில், தீபிகா படுகோன் நடித்திருந்த விளம்பரம் ஒன்றினை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. அதாவது, ‘ஸ்கில் இந்தியா’ திட்டத்திற்காக தீபிகா ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். அந்த விளம்பரம் ‘திறன் மேம்பாட்டு அமைச்சகம்’ சார்பில் படமாக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் சம வாய்ப்புகள் குறித்த கருத்தை முன்வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி எடுக்கப்பட்ட விளம்பரத்தை மத்திய அரசு ‘கைவிட்டிருப்பதாக’ தகவல் கிடைத்துள்ளது.

Image result for deepika padukone jnu

இது குறித்து ‘தி பிரிண்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் முறையாக அமர்த்தப்பட்டு எடுக்கப்பட்டவில்லை என மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக ‘தி பிரிண்ட்’ கூறியுள்ளது. மேலும் அந்த விளம்பர வீடியோவை ‘மதிப்பீடு’ செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜேஎன்யு மாணவர் போராட்டத்திற்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததே இந்தத் திடீர் நிறுத்தத்திற்கு காரணம் எனப் சிலர் கூறியுள்ளனர். 

Advertisement:
[X] Close