‘தர்பார்’ படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாகவும், சுனில் ஷெட்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 7ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 4 ஆயிரம் திரை அரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகளை திரையிட மாநில அரசு அனுமதி வழங்கியதால், திரை அரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களை மக்கள் வைத்து வருகின்றனர்.
#Darbar #Thalaivar One Man Show ?his energy,his style,his charisma is ever inspiring ?? Best wishes to Super star @rajinikanth sir @ARMurugadoss sir @anirudhofficial #Nayanthara and entire team for a big success ?? — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 9, 2020
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தர்பார் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “தர்பார்... ஒன் மேன் ஷோ... அவருடைய ஆற்றல், அவரது ஸ்டைல், அவரது வசீகரம் எப்போதும் ஊக்கமளிக்கிறது. ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத், நயன்தாரா மற்றும் மொத்த குழுவுக்கும் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!