காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கு இடமான நபர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி வந்த இளைஞர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிய குற்றவாளிகளின் அடையாளம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட
சம்பவத்தில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் கேரளா சாலையில் தப்பிச்சென்றிருப்பதால் அம்மாநில காவல்துறையினரின் உதவியுடன் தேடும்பணி நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற இருந்தவர். விபத்து காரணமாக 2 மாதங்கள் சிகிச்சையிலிருந்த உதவி ஆய்வாளர், அண்மையில்தான் பணியில் சேர்ந்துள்ளார். இந்த சூழலில் வாகன சோதனைப் பணியின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க ஆசைப்படும் காளையர்களே.. இதை கவனிச்சுக்கோங்க.!
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி