ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க ஆசைப்படும் காளையர்களே.. இதை கவனிச்சுக்கோங்க.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான குறைந்தபட்ச வயது 18-ல் இருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


Advertisement

தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கான வயது நிபந்தனை இந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Image result for jallikattu


Advertisement

இதுவரை 18 வயது முதல் 45 வயதுடைய நபர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு முதல் குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளம் வயதுடையவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கவே, விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

Image result for jallikattu

அதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள 10-ஆம் தேதி நடைபெறும் உடல்தகுதி பரிசோதனை முகாமில் கலந்துகொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பரிசோதனை முகாமில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement