வைஃபை மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு: ஜியோவின் புதிய வசதியை பெறுவது எப்படி?

வைஃபை மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு: ஜியோவின் புதிய வசதியை பெறுவது எப்படி?
வைஃபை மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு: ஜியோவின் புதிய வசதியை பெறுவது எப்படி?

வைஃபை மூலம் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதியை ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த முறைப்படி LTE வசதியை தேர்வு செய்யாமல், வைஃபை ஆன் செய்து அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என ஜியோ
தெரிவித்துள்ளது. வீடு மற்றும் அலுவலகத்தில் இருக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி உதவும் என்றும், இந்த சேவையை முற்றிலும்
இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. சில மாதங்களாக சோதனை முறையில் இருந்த வைஃபை காலிங் வசதி
தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகியற்றில் இந்த வசதியை பெறலாம்.

user

Wi-Fi Calling பெற எந்த வித Wi-Fi வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
Wi-Fi Calling முறை மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியும் செய்யலாம்
இந்த முறையை பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களது போனில் Wi-Fi Calling வசதி இருக்க வேண்டும்.

user

எப்படி?

உங்களது செல்போனில் Settings சென்று Wi-Fi Calling என Search செய்தால் இந்த வசதிக்கான ஆப்ஷன் இருக்கும். அதனை ஆன்
செய்துவிட்டு வழக்கமான முறையிலேயே யாருக்கு வேண்டுமென்றாலும் அழைக்கலாம். உங்களிடம் பேலன்ஸ் இல்லை என்றாலும் Wi-Fi
Calling மூலம் சாதாரண அழைப்புகளை செய்யலாம் என்பதே இதன் முக்கிய சிறப்பாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com