கன்னியாகுமரி அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

Sub-Inspector-shot-dead-near-Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை இளைஞர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தது தெரிய வந்துள்ளது.

image


Advertisement

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி வந்த இளைஞர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

“என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” - நெல்லை கண்ணன் நீதிமன்றத்தில் மனு 

image


Advertisement

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மூ வடநேரே நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement