எம்எல்ஏக்கள் 50% நிதி ஒதுக்கினால் அரசு சார்பில் நூலகங்களுக்கு சொந்த கட்டடம்: செங்கோட்டையன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டமன்ற உறுப்பினர்கள் 50% நிதி ஒதுக்கினால், அரசு சார்பில் நூலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Advertisement

சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள பிரசன்னா நகரில் 5 சென்ட் நிலம் ஒதுக்கும் விவகாரத்தால் நூலகம் இன்னும் சொந்த கட்டடத்திற்கு மாற்றப்படாமல், வாடகை கட்டடத்தில் இயங்குகிறது என்றார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கர் , விமான நிலையத்திற்கு 500 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்துகிறது. ஆனால் 5 சென்ட் நிலத்திற்காக நூலகம் அமைக்கப்படாமல் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

Image result for tn govt library local area building


Advertisement

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நமக்கும் குழந்தைகள் இருப்பதை கவனத்தில் கொண்டு, கட்சி பேதம் இன்றி வாசிப்பு பழக்கை ஏற்படுத்துங்கள் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், எரிக்கப்பட்ட யாழ்பானம் நூலகத்திற்கு 1 லட்சம் பிரதிகளை அரசு வழங்கியுள்ளது எனவும் உலகம் முழுவதும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நூலகங்களுக்கு 5 ஆயிரம் பிரதி நூல்கள் வழங்கப்படுகிறது என்றார்.

Image result for library in tamilnadu


Advertisement

5 சென்ட் நிலத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் தரமுடியவில்லை என்றாலும், தற்காலிக நிலத்தை வழங்கினால் நூலகம் கட்டித்தரப்படும் என்றார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நூலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித்தர 50% நிதி ஒதுக்கும்பட்சத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்

loading...

Advertisement

Advertisement

Advertisement