[X] Close >

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் - சுற்றுலா பயணிகள் ஆர்வம்

The-cherry-blossoms-in-Dindigul-are-blooming-beautifully-

பூத்துக் குலுங்கும் அலங்கார செர்ரி மலர்களை காண சுற்றுலா பயணிகளை ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில், ஆண்டுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் அலங்கார செர்ரி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆண்டின் பெரும்பகுதி இலைகளுடன் காணப்படும் இந்த மர‌த்திலிருந்து, டிசம்பர் மாதத்தில் இலைகள் முழுவதும் உதிர்ந்து,


Advertisement

ஜனவரி மாதத்தில் மரம் முழுவதும் மகர வண்ண செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கும். தற்பொழுது மரம் முழுவதும் அலங்கார செர்ரி மலர்கள் பூத்து குலுங்கியிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.


Advertisement

மேலும், தேன் சிட்டு குருவிகளும் பூத்து குலுங்கும் மலர்களில், தேன் குடிக்க தேனீக்கள் போல மரத்தின் மலர்களை மொய்ப்பது காண்போரை மகிழ்ச்சி அடையச்செய்து வருகிறது. இந்த மலர்கள் இந்த மாதம் முழுவதும் பூத்து குலுங்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close