விஜயுடன் முதல் காட்சி - பொங்கல் வரை காத்திருக்கும் விஜய்சேதிபதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து இயக்கி வரும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து முதன்முறையாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. அதன்பிறகு படக்குழு ஷிமோகா சென்றது. அங்கே பிரம்மாண்ட அளவில் சிறைச்சாலை செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்கான சில படங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்தன. கடந்த மாதம் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய்சேதிபதி பங்கேற்றார். ஆனால் அங்கே அவரது தனிப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டதாக தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.

Image result for vijay master


Advertisement

இந்நிலையில், மீண்டும் இரண்டாம் கட்டப் படிப்பின் தொடர்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில் அதற்காக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் போடப்பட்ட சிறைச்சாலை ‘செட்’ அப்படியே போடப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில்தான் விஜயுடன் சேர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் முதல் காட்சி படமாக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படப்பிடிப்பு பொங்கல் முடிந்தபின் தொடங்க உள்ளது. விஜய்சேதுபதி இந்தப் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிப்பதாக கூறுப்படுகிறது. ஆகவே இந்தக் காட்சிகள் நிச்சயம் சண்டைக்காட்சியாகவே இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

Image result for vijay master

இப் படத்தினை சேவியர் பிரிடோ அவரது எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் உறவினர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியா ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தனு பாக்யராஜ், அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சய் உள்ளிட்ட நடிகர்கள் விஜயுடன் திரையை பகிர்ந்து கொள்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement