[X] Close >

“காங்கிரஸ் மக்களை தவறாக வழி ந‌டத்துகிறது” - நிர்மலா சீதாராமன்

Nirmala-Sitharaman-launches-awareness-campaign-on-CAA-in-Jaipur

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மக்களை குழப்பி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement

ராஜஸ்தான்‌ தலைநகர் ஜெய்ப்பூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டப் பிரச்னையில் காங்கிரசும் பிற எதிர்க்‌கட்சிகளும் மக்களை தவறாக வழிநடத்தி வருவ‌தாகக் குற்‌றஞ்சாட்டினார். பாகிஸ்தானிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியா வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் பெரும்பா‌லானோர் இஸ்லாமியர்கள்தான் எனவும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழ‌‌ங்கப்பட்டதாகவும் நிர்மலா சீ‌தாராமன் தெரிவித்தார்.

Image result for nirmala sitharaman


Advertisement

முன்னதாக குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து‌ மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பாரதிய ஜனதா சார்பில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் பயணம் தொடங்கி உள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களை நேரில் சந்தித்து குடியுரி‌மைத் திருத்தச் சட்டம் குறித்து எடுத்‌துரை‌த்தா‌ர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close