ஆறு பந்துகளில் 6 சிக்ஸர்கள் - வியக்க வைத்த நியூஸிலாந்து வீரர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ‘சூப்பர் ஸ்மாஷ்’ டி20 தொடரில், லியோ கார்டர் 6 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசி அனைவரையும் வியக்க வைத்தார்.


Advertisement

‘சூப்பர் ஸ்மாஷ்’ என்ற டி20 தொடர் நியூசி‌லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 22வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் கேண்டர்புரி மற்றும் நார்தெர்ன் நைட்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. முதல் பேட்டிங் செய்த நார்தெர்ன் நைட்ஸ் 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டிம் ஷெய்ஃபெர்ட் 74 (36), டேன் பிரவுன்லி 55 (29) ரன்கள் குவித்தனர்.

image


Advertisement

இதனை எதிர்த்து ஆடிய கேண்டெர்புரி அணி 18.5 ஓவர்களில் 222 ரன்கள் குவித்து வெற்றி அடைந்தது. சாட் பவ்ஸ் 57 (31), கோல் மெக்கன்ஸி 49 (25) ரன்கள் எடுத்தனர். அத்துடன் அதிரடியாக விளையாடிய நியூஸிலாந்து அணியைச் சேர்ந்த வீரர் லியோ கார்டர் 29 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதற்கிடையே தேவ்சிச் வீசிய 16வது ஒவரில், ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை பறக்க விட்ட லியோ கார்டர், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஈராக்கில் அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

loading...

Advertisement

Advertisement

Advertisement