‘என் மகனின் நிச்சயதார்த்தம் எங்கள் குடும்பத்திற்கே தெரியாது’ - ஹர்திக் பாண்ட்யா தந்தை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹர்த்திக் பாண்ட்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டது எங்களுக்கு தெரியாது என அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

இந்தப் புத்தாண்டின் பெரிய சர்ப்ரைஸ் ஹர்திக் பாண்ட்யா, அவரது காதலி நடாசாவை இன்ஸ்டா பக்கத்தில் அறிமுகம் செய்து வைத்ததுதான். அதை அறிந்த பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அடிபட்டு சிகிச்சையில் இருந்தவர் திரும்பி வந்து இப்படி ஒரு சர்ப்ரைஸ் செய்தியை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.


Advertisement

இதை அறிந்த அவரது சகோதரர் குர்ணல் பாண்ட்யா, அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘பைத்தியகாரத்தனத்திற்குள் உங்களை வரவேற்கிறேன்’ என்று காதல் வாழ்வை மறைமுகமாக நக்கல் செய்து ட்வீட் போட்டிருந்தார்.

இந்நிலையில் இந்திய அனியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக செய்து வெளியாகி உள்ளது. அச்செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரது தந்தை ஹிமான்ஷு பேசுகையில், “ஹர்திக்கின் நிச்சயதார்த்த திட்டங்கள் குறித்து குடும்பத்திற்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.


Advertisement

மேலும் “நடாசா ஒரு நல்ல பெண். நாங்கள் அவளை மும்பையில் பல சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளோம். அவர்கள் துபாய்க்கு விடுமுறைக்குச் செல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறார்கள் என்று எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பின்தான் அதைப் பற்றி நாங்களே அறிந்தோம்”என்று ஹர்திக்கின் தந்தை ‘பம்பாய் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் இப்படியான காதல் மணம் ஒன்று புதியதில்லை. 2017 ஆம் ஆண்டில் நடிகை அனுஷ்கா ஷர்மாவை இந்திய கேப்டன் விராட் கோலியுடன் முடிச்சுப் போட்டு பல செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்கள் அதை மறுத்து வந்தனர். இறுதியில் காதலை வெளிப்படையாக அறிவித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement