Advertisement

சாதி, பணத்தை தாண்டி அதிக வாக்குகளை பெற்றுள்ளோம் : சீமான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2021ல் யார் வேட்பாளர்கள் என இம்மாத இறுதிக்குள் முடிவு செய்து விடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “2021ல் யார் வேட்பாளர்கள் என இம்மாத இறுதிக்குள் முடிவு செய்து விடுவோம். ஒன்றரை ஆண்டுகள் அவர்களை தொகுதிக்குள் அனுப்பி களப்பணியாற்ற வைக்க இருக்கிறோம். 117 ஆண்கள் 117 பெண்கள் என சம வாய்ப்பு பெண்களுக்கு அளிப்பது என்பது எங்களின் கொள்கை முடிவு. அதன்படி தேர்தலை எதிர்கொள்வோம். உள்ளாட்சி தேர்தலில் சாதி, பணத்தை தாண்டி அதிக வாக்குகளை பெற்றுள்ளோம்.


Advertisement

4 விழுக்காடிலிருந்து 10 விழுக்காடு அளவிற்கு முன்னேறியுள்ளோம் என்பது எவ்வளவு பெரிய வளர்ச்சி?. ஊரக பகுதிகள் எல்லாம் எங்கள் கட்சி போய் சேராத இடம் இல்லை. ஊராட்சி தலைவர்கள் மத்தியில் பல இடங்களில் வென்றுள்ளோம். வார்டுகள் மத்தியிலும் பல இடங்களில் வென்றுள்ளோம். நாகர்கோவிலில் ஒன்றிய அளவில் வென்றிருப்பது பெரிய மாற்றம்தான்” என்றார்.

தேவாலயத்தின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை! 

loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement