“நான்தான் முன்னிலையில் இருந்தேன்” - மறு வாக்கு எண்ணிக்கைக்கு வலியுறுத்தி தற்கொலை முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரியலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டவர் மறு வாக்கு எண்ணிக்கைக்கு வலியுறுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

அரியலூர் அருகே உள்ள அல்லி நகரம் ஊராட்சி மன்ற தலைவருக்கான வாக்கு எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூா் ஒன்றியத்தில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவராக மருதமுத்து என்பவர் 130 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

image


Advertisement

இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிவேல் என்பவர் வாக்கு எண்ணிக்கையின்போது தான்தான் முன்னிலையில் இருந்ததாகவும் பின்னா் எதிர்த்து போட்டியிட்டவா் வெற்றி பெற்றதாக அறிவித்து குளறுபடி செய்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார். எனவே மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பழனிவேல் ஆதரவாளர்கள் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் தோல்வியால் ஆத்திரம்... குடிநீர் குழாய்களை அடித்து நொறுக்கிய ஆதரவாளர்கள்?

அப்போது பழனிவேல் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டனர். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement