JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

‘எதிரும் புதிருமாக இரண்டு சிங்கங்கள்’ - பொன்னியின் செல்வன் அப்டேட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

image

அந்த போஸ்டரில் பிரம்மாண்டமான கத்தி ஒன்று இடம் பெற்றுள்ளது. பல எல்லைகளை கடந்து வெற்றி கண்ட கத்தியாக, அது தோற்றமளிக்கிறது. அதற்குப் பின்புறத்தில் மலைகள் காட்சியளிக்கின்றன. கத்தியில் இரண்டு சிங்களும், அத்துடன் சிங்கத்தின் முகமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், பல நவரத்ன கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி படத்தின் கதை, இசை, எடிட்டர், இயக்குநர் உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, கதை - கல்கி, இசை - ஏ.ஆர்.ரகுமான், புகைப்பட இயக்குநர் - ரவி வர்மன், வசனம் - ஜெயமோகன், இயக்குநர் - மணிரத்னம் உள்ளிட்ட தகவல்களும் போஸ்டரில் உள்ளன.

தன்னம்பிக்கையுடன் விளையாடிய மாற்றுத் திறனாளி மாணவன்... பாராட்டிய சச்சின்...!

Advertisement: