இன்ஸ்டாவில் காதலியை அறிமுகம் செய்த ஹர்திக் பாண்ட்யா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தப் புத்தாண்டின் பரிசாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது காதலியை இன்ஸ்டா பக்கத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, நடிகை நடாசா ஸ்டான்கோவிக் உடனான தனது காதலை இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். புத்தாண்டு தினத்தன்று, ஹர்திக் பாண்ட்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் கைப்பிடித்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “எனது பட்டாசுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளர். அதாவது பட்டாசு என்றால் காதலியைக் குறிக்கும் நோக்கில் இந்தச் சொல்லை பயன்படுத்தியுள்ளார்.


Advertisement

ஹர்திக் அவரது காதலியான நடாவுடன் டேட்டிங் செய்து வருவதாக சில காலமாகவே தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தன. அதனை தனது பதிவின் மூலம் பாண்ட்யா காதலை உறுதிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹார்திக்கின் மைத்துனர் பங்கூரி சர்மா ஆகியோர் இவரின் இன்ஸ்டா பதிவுக்கு முதலில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா முதுகுவலி ஏற்பட்ட காயத்தால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதிலிருந்து மெல்ல இப்போதுதான் மீண்டு வருகிறார். அதனை வெளிப்படுத்தும் விதமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வந்தார். முன்பைக் காட்டிலும் அதிக வேகத்துடன் வருவேன் என்று அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்திருந்தார். இந்த அறுவைச் சிகிச்சை காரணமாக அவரை செப்டம்பர் 2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி விலக்கி வைத்துள்ளது.

தற்போது தனது உடலை சீர்செய்து பழைய நிலைக்கு திரும்ப கொண்டுவரும் இறுதிக் கட்ட சிக்கிச்சையில் அவர் உள்ளார். அடுத்த மாதம் தொடங்கி இந்தியா ஏ அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 22 முதல் 26 வரை நடைபெறும் 3 அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ளார்.


Advertisement

பாண்ட்யா முழு உடற்தகுதிக்கு திரும்பி வருவதால், 2020 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ள நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் பிற்பகுதியில் மறுபிரவேசம் செய்து அணிக்கு நல்ல ஒத்துழைப்பு தருவார் என இந்தியா அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement